Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கல்குவாரிக்குச் சொந்தமான டிராக்டர் மோதி 2 வயது குழந்தை உயிரிழப்பு….!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தனியாருக்கு சொந்தமான டிராக்டர் மோதி 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விண்ணமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது. கல் குவாரிகளில் இருந்து சல்லி மற்றும் கற்கள் வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுவது வழக்கம். இந்நிலையில் அங்கு வசிக்கும் பார்த்திபன் – மீனா தம்பதியினரின் 2 வயது குழந்தை மீது கல் குவாரிக்கு சொந்தமான டிராக்ட்ர் மோதியதில் சம்பவ இடத்திலே குழந்தை உயிரிழந்தது.

தகவல் அறிந்து போலீசார் விசாரணைக்கு சென்றபோது கல் குவாரி உரிமையாளர் மற்றும் டிராக்டர் ஓட்டுநரை  கைது செய்யும் வரை சடலத்தை பெறமாட்டோம் என கூறி குழந்தையின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்திய கிராம மக்களை சமரசபடுத்திய போலீசார் தப்பி ஓடிய ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

Categories

Tech |