Categories
அரசியல் சற்றுமுன்

“கலைஞர் உணவகம்” வந்தால் வரவேற்கிறோம்… வாழ்த்துகிறோம்…. செல்லூர் ராஜூ…!!!

தமிழகத்தில் அம்மா ஜெயலலிதா அவர்கள் மறைந்த பிறகும் கூட அம்மா உணவகம் வழக்கம்போல் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி வந்தபிறகு அம்மா உணவகம் மூடப்படும் அல்லது பெயர் மாற்றப்படும் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் அதற்கு மாறாக அம்மா உணவகம் வழக்கம்போல் செயல்பட்டது. அதுவும் அம்மா உணவகம் என்ற பெயரிலேயே செயல்பட்டது.

இந்நிலையில் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் கருணாநிதி கண்ட பட்டினியிலா தமிழ்நாட்டை உருவாக்கவும், முதல்வர் முக ஸ்டாலின் ஆணைப்படி தமிழகம் முழுவதும் 500 சமுதாய உணவகங்கள் ‘கலைஞர் உணவகம்’ என்ற பெயரில் அமைக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, கலைஞர் உணவகம் குறித்த கேள்விக்கு, மக்களுக்கு குறைந்த விலையில் உணவு கொடுக்கும் திட்டம் அம்மா உணவகம் மூலமாக தொடங்கிய வரலாறு புரட்சித்தலைவி அம்மா அவர்களைத்தான் சேரும். இதனால் பல லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் இன்றைக்கு பசியாருகிறார்கள். அம்மா கொண்டு வந்த திட்டத்தை எடப்பாடி அவர்கள் சிறப்பாக கொண்டு வந்தார்கள். இது போன்று கலைஞர் உணவகமும் வந்தால் அதை வரவேற்கிறோம் வாழ்த்துகிறோம் என்று பேசியுள்ளார்.

Categories

Tech |