மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை மனுவாக எழுதி கொடுத்தனர்.
இதில் கலந்து கொண்ட சில மக்கள் முதியோர் உதவித்தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மனு கொடுத்திருந்தனர். அதன்பிறகு சிலர் வீட்டு மனை பட்டா, கடனுதவி கேட்டு மனு கொடுத்திருந்தனர். மேலும் மணிகண்டன் என்ற மாற்றுத்திறனாளி படகு பகுதியிலிருக்கும் உயர் கோபுர மின்விளக்கு சரிவர ஒளிர்வதில்லை என்று மனு கொடுத்திருந்தார். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட வருவாய் அதிகாரி உங்களுடைய விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார்.