Categories
நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கலெக்டரை மாத்தணும்…! அனுமதி கேட்ட தமிழக அரசு…. OK சொன்ன சுப்ரீம் கோர்ட் …!!

நீலகிரி ஆட்சியர் இன்னசன்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மதன் பி லோகூர் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, நீலகிரியில் யானைகள் வழித்தடம் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, யானை ராஜேந்திரன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி யானைகள் வழித்தடத்தில் உள்ள கட்டடங்கள் மற்றும் ரெசார்ட்களை உடனடியாக நீக்க கோரி உத்தரவிட்டிருந்தார்.

மேலும் விதிமுறைகளை மீறி புதிய கட்டுமானங்களுக்கு அனுமதி அளிக்க கூடாது எனவும் கூறியிருந்தார். இதனை துரிதமாக செயல்படுத்த மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இதனையடுத்து நீலகிரி ஆட்சியராக இருந்த இன்னசென்ட் திவ்யா பணிகளை மேற்கொண்டு வந்தார்.

இதற்கிடையே கடந்த 2017-ஆம் ஆண்டிலிருந்து நீலகிரி ஆட்சியராக பணியாற்றிய அவரை பணியிட மாற்றம் செய்யும் சூழல் ஏற்பட்ட நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. தற்போது நிர்வாக ரீதியாக மாற்றங்களை செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு இடைக்கால மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இன்னசென்ட் திவ்யாவை பணியிடை மாற்றம் செய்ய அனுமதி அளித்துள்ளது.

Categories

Tech |