Categories
டென்னிஸ் விளையாட்டு

கலக்கிய ரபெல் நடால்….! 4வது சுற்றுக்கு முன்னேற்றம்… மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!

ரபேல் நடால் ,மெத்வதேவ் இருவரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின்  4 வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர் .

ஆஸ்திரேலியாவில் மெல்போர்னின்  கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவரும், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவருமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், 69- நிலை வீரரான கேமரூன் நோர்ரியை 6-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்று ஆட்டத்தில் எதிர்கொண்டார் .

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 14-வது முறையாக 4வது சுற்றுக்கு நடால்  7-5, 6-2, 7-5 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று முன்னேறியுள்ளார். இதே போன்று உலகத்தரவரிசையில் 4 வது இடத்தில் இருக்கும் ரஷ்ய வீரரான டேனில் மெத்வதேவ் செர்பியாவில் கிராஜ் நோவிச்சை 6-3, 6-3, 4-6, 3-6, 6-0 என்ற செட் கணக்கில் போராடி வீழ்த்தி 4வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். மேலும் இவர் 5 செட் வரை நீடித்த ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றது இதுவே முதல் முறையாகும் . சர்வதேச டென்னிசில் தொடர்ச்சியாக பெற்ற 17ஆவது வெற்றியும் ஆகும்.

Categories

Tech |