Categories
உலக செய்திகள்

கலக்கிய இந்திய பெண்கள்…! அமெரிக்கா இதழ் புகழாரம்… வைரலாகும் அட்டைப் படம் …!!

டெல்லியில் நடைபெறுகின்ற விவசாயிகளின் போராட்டத்தில் பங்குபெற்ற பெண்களின் படங்களை அமெரிக்க நாட்டின் இதழ் வெளியிட்டுள்ளது.

டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தை எதிர்த்து கடந்த 100 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர் விவசாயிகள். இந்தப் போராட்டத்தில் பங்கு பெற்ற பெண்களின் படத்தை அமெரிக்காவின் இதழான டைம் அட்டைப் படமாக தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் இந்தப் போராட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

உச்ச நீதிமன்றம் பெண்களைப் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று கூறியும் அவர்கள் அதை மீறி போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து டைம் இதழ் அட்டை படமாக்கி உள்ளது. இதில் விவசாய போராட்டத்தின் முன்னணி வீரர்கள் எனவும் டைம் இதழ் இந்திய பெண்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளது. இந்த போட்டோ சமூக வலைத்தளத்தில் வைரலாவதுடன் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

Categories

Tech |