Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

கலகம் ஏற்படுத்த முயற்சிக்க வில்லை – துரைமுருகன் விளக்கம்

இன்று காலை ஒரு செய்தி வெளியானது. அதில் பொதுச் செயலாளர் பதவி கிடைக்காததால் துரைமுருகன் அதிருப்தியில் இருப்பதாக ஒரு செய்தி வந்தது. அதற்கு பதில் அளிக்க கூடிய துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஏதோ எனக்கு பொதுச் செயலாளர் பதவி கிடைக்கவில்லை என்ற ஏக்கத்தில் கழகத்தில் கலகத்தை உருவாக்குவது போல ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். அது முற்றிலும் என்னுடைய கற்பனையானது. இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என்று கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

எனக்கு எம்எல்ஏ பதவி எம்பி பதவி கிடைக்கும், அமைச்சர் பதவி கிடைக்கும் என்று திமுகவுக்கு வந்தவன் அல்ல என்று விளக்கம் சொல்லி உள்ளார்.  அண்ணாவின் திராவிட நாடு கொள்கையை பார்த்து ஒரு போராளியாக 1953 ஆம் ஆண்டு இந்த இயக்கத்திற்கு வந்தவன் நான். இதுவரை பெற்ற பதவிகள் எனக்கு கிடைக்காமல் போயிருந்தாலும், கட்சியின் அடிமட்ட தொண்டனாக இரு வண்ண கொடியை பிடித்து கழகத்திற்கு கோஷமிட்டு இருப்பேன். இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |