Categories
மாநில செய்திகள்

“கற்கண்டால் அடித்தால் வலிக்கவே செய்யும்” தலைமைச்செயலாளர் இறையன்புவின்…. வாழ்க்கை தத்துவங்கள் இதோ…!!!

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டார். இறையன்பு பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் நாகை ஆட்சியராக தனது பணியைத் தொடங்கியவர். காஞ்சிபுரம் ஆட்சியர் சுற்றுலா துறை செயலாளராக பணியாற்றி உள்ளார். 2019 முதல் அண்ணா மேலாண்மை கல்வி நிறுவன இயக்குனராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் புத்தகம் எழுதுவதில் வல்லவர். பல்வேறு புத்தகங்களையும் எழுதியுள்ளார். அந்தவகையில் செயலர், செய்தி மற்றும் சுற்றுலாத்துறையில் பணியில் இருந்தபோது முக்கிய விருந்தினர்களுக்கு சால்வை அணிவிப்பதற்குப் பதிலாக புத்தகங்களைப் பரிசாக வழங்கும் முறையை அறிமுகப்படுத்தினார். அரிசி ஆலை மற்றும் குவாரிகளில் வேலை செய்து வந்த பல கொத்தடிமைகளை விடுவித்து, அவர்களுக்கு புனர்வாழ்வு வசதிகளும் அளித்தார். மாவட்ட ஆட்சியராகப் பணியில் சேர்ந்த முதல் நாளிலேயே மண் கடத்தலைத் தடுக்க முயற்சிகளை மேற்கொண்டார். 

எளியோருடைய தேவைகளை நிறைவேற்றுவதற்காக அவர்களுடன் நெருங்கிப் பழகுபவர். நேர்மை, பாரபட்சமற்ற தன்மை போன்றவற்றை பணியின் தொடக்கத்திலிருந்து தரித்துக்கொண்டவர். நியாயமான நிர்வாகத்தை நடத்துவதுடன் சிறந்த ஆளுகையை தருவதற்காக அரசு இயந்திரத்தை முடுக்கி விடும் இயல்பு கொண்டவர். சில நேரங்களில் மனுதாரர்கள் மனு கொடுத்துவிட்டு வீட்டுக்குச் செல்வதற்குள் அவர்களுடைய குறைகளைத் தீர்த்துள்ளார். இந்நிலையில் இவர் எழுதிய சில தத்துவங்கள் நம்மை முன்னடத்தி செல்வதாக இருக்கின்றன. அவை என்னவென்று பார்க்கலாம்.

*மூச்சுப் பிடிக்காமல் முத்துகுளிக்க முடியாது.

*கற்கண்டால் அடித்தால் வலிக்கவே செய்யும்.

*வெட்ட வெளிச்சத்தில் தான் எல்லாம் நடக்கின்றன. நாம் தான் விழிகளை திறக்க மறக்கின்றோம்.

* வெட்டப்படும் முன் ஆடுகளின் கழுத்தில் மாலை அணிவிக்கப்படுகின்றன. புகழ்ச்சி மனிதன் பெறும் மாலை.

*வீசுகின்ற வலைக்கு ஒருபக்கம் உணவும், மறுபக்கம் உயிரும் ஊசலாடுகின்றன.

*ஞாயிறுக்கு இல்லை ஞாயிற்றுக்கிழமை.

*தவறுக்கு வருந்துவதை விட திருந்துவதே மேன்மை.

*எல்லா விதைகளும் மரமாகாது என்னும் விவரம் விருட்சத்திற்கு தெரியும்.

*ஆங்கிலத்தை தமிழில் மொழிபெயர்த்த  இப்போது வாரிசுகளுக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கற்றுத்தருகிறது.

*வினாக்குறிகள் அதிகம் இருப்பவனே அடுத்தவர்களுக்கு வியப்புக்குறியாகிறான்.

Categories

Tech |