Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கர்ப்பிணி பெண் தற்கொலை…. காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்…. கடலூரில் பரபரப்பு….!!!!

கர்ப்பிணிப் பெண் தற்கொலைக்கு காரணமான கணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் திருமலை அகரம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பாலாஜி என்பவர் வசித்து வருகின்றார். இவர் அரியலூர் மாவட்ட த்தில் பூக்குலி கிராமத்தைச் சேர்ந்த வரதராஜன் என்பவருடைய மகளான வினோதினியை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 1 1/2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இதனை அடுத்து வினோதினி இரண்டாவதாக கருத்தரித்து இருந்தார். இதனை அடுத்து மூன்று மாத கர்ப்பிணியாக உள்ள வினோதினி திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

இந்த தகவலை பாலாஜி மாமனாரான வரதராஜனுக்கு தெரிவித்துள்ளார். இது குறித்து வரதராஜன் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வினோதினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அதன் பின் வினோதினியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் வினோதினியின் மரணத்திற்கு கணவன் பாலாஜி, மாமனார் பரமசிவம், மாமியார் லட்சுமி தான் காரணம் எனவும் அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் வினோதினியின் உறவினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், தமிழக தேசிய பேரியக்கம், இந்திய ஜனநாயக மாதர் சங்கத் சங்கத்தினர் ஆகியோர் நேற்று காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித் ஜெயின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கர்ப்பிணி வினோதினியின் மரணத்திற்கு காரணமானவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்த பின் அவர்கள் கலந்து சென்றனர். அது மட்டுமல்லாமல் வினோதனையின் கணவரான பாலாஜியை தற்கொலைக்கு தூண்டிய காரணத்திற்காக பெண்ணாடம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Categories

Tech |