Categories
உலக செய்திகள்

கர்ப்பிணி பெண்ணை…. சோதனை செய்த போலீசார்…. வயிற்றில் காத்திருந்த அதிர்ச்சி…!!

பெண் ஒருவர் கர்ப்பிணி போல நாடகமாடி போதைப்பொருட்களை கடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டில் சமீபத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினருக்கு அவ்வழியாக வந்த கர்ப்பிணி பெண் மேல் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த கர்ப்பிணிப் பெண்ணை சோதனையிடும் போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. ஏனெனில் அந்த பெண் கர்ப்பிணியே அல்ல என்பது தெரியவந்துள்ளது. அந்தப் பெண் தன்னுடைய வயிற்றில் ஒரு தர்ப்பூசணியை மறைத்து வைத்திருந்துள்ளார்.

அவர் அந்த தர்பூசணி பழத்தினுள் நான்கு பவுண்டுகளுக்கும் அதிகமான எடை கொண்ட போதை பொருட்களை மறைத்து வைத்திருந்துள்ளார். இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த பெண் தான் அந்த போதைப்பொருளை Paraguay நாட்டில் இருந்து Riode Janerio நாட்டிற்கு கொண்டு செல்ல இருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் இதை கடத்திச் செல்வதற்காக அவருக்கு நூறு டாலர்கள் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இப்போது வெறும் அந்த 100 டாலர்களுக்காக அந்தப்பெண் சிறைக்கு செல்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |