Categories
உலக செய்திகள்

கர்ப்பிணியான 23வயது பெண்….. கொலை செய்து ப்ரிட்ஜில் வைப்பு…. காதலன் வெறிச்செயல் …!!

இளம் கர்ப்பிணி பெண்ணை கொலை செய்து உடலை பிரிட்ஜில் அடைத்து வைத்த சம்பவம் அதிசய ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் செலினா. கர்ப்பிணிப் பெண்ணான இவருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் செலினா கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளார். அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தினால் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள செலினாவின் முன்னாள் காதலர் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கு இருந்த பிரிட்ஜை திறந்து பார்த்தபோது காவல்துறையினருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. முகம் மற்றும் கழுத்தில் பயங்கர காயத்துடன் செலினா சடலமாக இருந்தார். இதனை தொடர்ந்து செலினாவின் முன்னால் காதலரை கைது செய்த காவல்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை கொலை செய்ததற்கான காரணம் தெரியவரவில்லை.

Categories

Tech |