Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கர்ப்பப்பையில் நீர்க்கட்டி… ஜிம்மிற்கு அனுப்பி வைத்த கணவர் ராஜேஷ்… மனைவியை அழைத்துச்சென்ற யோகேஷ்… நடந்தது என்ன?

காதல் மனைவி உடற்பயிற்சி கூட உரிமையாளருடன் சென்றதால் கணவன் நிலைகுலைந்து புகார் அளித்துள்ளார்

மதுரை மாவட்டத்தில் இருக்கும் பெருங்குடி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கனிமொழி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் கனிமொழி மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட போது அவரது கர்ப்பப்பையில் நீர்க்கட்டி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனை குறைக்க உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உள்ளார்.

அங்கு உரிமையாளர் யோகேஷ் என்பவருடன் கனிமொழிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது ராஜேஷிற்கு தெரியவர அவர் கனிமொழியிடம் யோகேஷிடம் பழகுவதை நிறுத்தி விடுமாறு கண்டித்துள்ளார். இது யோகேஷுக்கு தெரிய வர கோபம் கொண்ட அவர் தனது நண்பர்கள் உதவியுடன் கனிமொழியை அழைத்துச் சென்றுவிட்டார்.

இதனால் உடைந்துபோன ராஜேஷ் காவல் துறைக்கு சென்று புகார் கொடுத்தார். அதில் “தன்னை தொடர்பு கொண்ட யோகேஷ் கண்ணா என்பவர் எனது மனைவியை மறுபடியும் என்னிடம் அனுப்ப வேண்டும் என்றால் பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டுகிறார். எனது மனைவியை நீங்கள் தான் மீட்டுத் தர வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார். புகாரை ஏற்ற டிஎஸ்பி வினோதினி ராஜேஷ், கனிமொழி மற்றும் யோகேஷ் கண்ணாவிடம் விசாரித்து வருகிறார்.

Categories

Tech |