கர்நாடகாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்குகிறது.
கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் 4,471 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 7,98,378 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 52 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 10,873 ஆக உயர்ந்தது. மேலும் 7,153 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் இதுவரை 7 லட்சத்து 737 பேர் குணமடைந்து உள்ளதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 6,417 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,38,961 உயர்ந்தது. நேற்று மட்டும் 137 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். இதனால் பலி எண்ணிக்கை 43,152 அதிகரித்தது. நேற்றைய நிலவரப்படி மகாராஷ்டிராவில் 1,40,198 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.