பெங்களூர் உட்பட கர்நாடகத்தில் பல்வேறு பகுதிகளில் செல்போன் செயலி மூலமாக வாடகை கார்கள் இயக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக ஓலா, உபர், ராபிடோ போன்ற நிறுவனங்கள் வாடகை கார்கள் வழங்கும் சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனங்கள் இந்த சேவையில் ஆட்டோக்களையும் இணைத்து இருக்கிறது. இந்த சூழலில் இந்த வாகனங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். இதனை அடுத்து கர்நாடக போக்குவரத்து ஆணையம் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் வாடகை கார்களை மட்டுமே இயக்க இயக்க வேண்டும் ஆட்டோக்களை இந்த சேவையில் ஈடுபடுத்துவது சட்டப்படி தவறு என்று கூறி மூன்று நாட்களுக்குள் வாடகை ஆட்டோ சேவையை இந்த நிறுவனங்கள் கைவிட வேண்டும் என்று ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் வாடகை ஆட்டோ சேவையை நிறுத்த அரசு நிர்ணயித்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று முதல் பெங்களூர் உட்பட கர்நாடக முழுவதும் ஓலா, உபர், ராவிடோ போன்ற நிறுவனங்கள் சார்பில் இயக்கப்படும் வாடகை ஆட்டோக்கள் ஓடாது என தெரிவிக்கப்படுகிறது. மேலும் அரசின் இந்த உத்தரவை மீறி ஆட்டோக்கள் இயக்கப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க போக்குவரத்து ஆணையம் தயாராக இருப்பதாக கூறப்படுகின்றது.