கர்ணன் படத்தில் காட்டு பேச்சி கதாபாத்திரத்தில் நடித்த சிறுமியின் புகைப்படம் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் கர்ணன். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி இருந்த இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், யோகிபாபு, கௌரி கிஷன், லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் கர்ணன் படத்தில் காட்டுப்பேச்சி கதாபாத்திரத்தில் நடித்த சிறுமியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் முதல் காட்சியில் மட்டுமே காட்டு பேச்சியின் முகம் கட்டப்பட்டிருக்கும் . இதையடுத்து இந்த கதாபாத்திரம் படம் முழுவதும் முகமூடி அணிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.