மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. அதனால் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளை சேர்ந்த நாமக்கல்,சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் காவிரி கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக வெள்ளி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஈரோடு பவானி நகராட்சிக்கு உட்பட்ட கந்தன் பட்டறை பகுதியில் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள 40க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. அதனால் அங்கு வசித்து வந்த 120க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்ட திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளன.