Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கரை புரண்டு ஓடும்வெள்ளம்…. முகாம்களில் தங்க வைக்கப்பட்ட பொதுமக்கள்…. ஆய்வு செய்யும் வருவாய் துறை அதிகாரிகள்….!!!!!

மழை வெள்ளத்தால் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காவேரி ஆற்றில் கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் தண்ணீர் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 8 உபரி நீர் அணைக்கரை கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால்  கொள்ளிடம் கலையோரம் உள்ள பகுதிகளில் முன்னேற்பாடாக மணல் மூட்டைகளை நீர்வளத் துறை அதிகாரிகள் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

மேலும்   அணைக்கரை கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை வருவாய்த்துறை அதிகாரிகள் முகாமிட்டு தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

Categories

Tech |