Categories
மாநில செய்திகள்

கரூர் மாணவி தற்கொலை…. திடீர் திருப்பம்…. ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை…. பரபரப்பு….!!!!

கரூர் மாவட்டத்தில் பாலியல் துன்புறுத்தலால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் பாலியல் சீண்டலால் உயிரிழக்கும் கடைசி பெண் நானாகத் தான் இருக்க வேண்டும் என்று மாணவி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், குற்றவாளியை கண்டறிய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில்  மாணவி படித்த பள்ளியின் கணித ஆசிரியர் சரவணன் என்பவர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே செங்காட்டுப்பட்டியில் உள்ள தனது மாமனார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலைக்கான காரணம் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |