Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூரில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உடைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்..!!

கொரோனோவால்  பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உடைகள் தயாரிக்கும் பணிகள் கரூரில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாளொன்றுக்கு 500 க்கும் அதிகமான பாதுகாப்பு கவச உடைகளை தயாரிக்கும் தொழிலாளிகள் அவற்றை கரூர், நாமக்கல்,கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கின்றார்கள். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பத்தாயிரம் உறைகள் தேவைப்படும் நிலையில் சில உபரி பொருட்களுக்கு நிலவும் தட்டுப்பாட்டை போக்கினால் மிகவேகமாக அதிகளவில் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு கவசங்களை தயாரிக்கலாம் என்கிறார்கள் இந்த நிறுவனங்களை சேர்ந்தவர்கள்.

கண்ணுக்குப் புலப்படாத கொரோனாக்கு எதிரான யுத்தத்தில் மனித குலத்தைக் காக்க முன் நிற்பவர்கள் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் ஆவார்கள், தன்னலமற்று சேவையாற்றி வருகிறார்கள். இவர்களுக்கான பாதுகாப்பு உடைகள் மிகவும் அவசியமானவை தற்போது இவற்றின் தேவை அதிகரித்துள்ள நிலையில் கரூரில் இரண்டு நிறுவனங்கள் இந்த பாதுகாப்பு உடைகளை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

ஓவன்ஹோடன் மெட்டீரியல் என்ற ரகத்தினால் மட்டுமே இந்த பாதுகாப்பு கவச உடையை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் தலை, முகம் ஆகியவற்றை சுத்தமாக மூடி கண்கள் மட்டும் தெரியும்படியான தலை உறைகளும் தயாரிக்கப்படுகின்றன.

Categories

Tech |