முடி அடர்த்தியாகவும் அதிகமாகவும் வளர என்ன செய்யலாம் என்பதை இந்த செய்தித் தொகுப்பில் நாம் காணலாம்.
முடி அதிகமாக வளர வெந்தயத்தை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலை முடி கருப்பாகவும், மென்மையாகவும், பளபளப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
நெல்லிக்காய், ஊற வைத்த வெந்தயம் இரண்டையும் நன்றாக அரைத்து தலையில் தேய்த்து ஊற வைப்பதால் அது உடம்பிற்கு நன்கு குளிர்ச்சியை தருவதோடு எரிச்சலையும் போக்கும்.
கீரைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வதினால் முடியை வளர செய்வது மட்டுமின்றி உடம்பில் ஆரோக்கியத்தையும் அதிகப்படுதுகிறது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக இருப்பதால் இதனை நாம் சீரான முறையில் எடுத்துக்கொள்ளும்போது முடி வளர்ச்சியை அதிகமாகும்.
கருப்பு சுண்டல், பச்சைப் பட்டாணி போன்ற பருப்பு வகைகளை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். இதில் இரும்பு ,அயோடின் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது. இவற்றிலுள்ள விட்டமின் டி முடி வளர்வதற்கு முக்கிய பங்களிக்கிறது.
பாதாம்,முந்திரி போன்ற நட்ஸ்களில் ஒமேகா 3 இருக்கையில் அது முடியை கருமையாவும் ஆரோக்கியமாகவும் வளர உதவி புரிகிறது.