கருமையான கைகளை வெள்ளையாக மாற்றுவது எப்படி என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
நம் வீட்டு பெரியவர்கள் நம் கை மற்றும் கால்களை கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பார்கள். குறிப்பாக வெளியில் சென்று விட்டு வீடு திரும்பினால், வீட்டில் இருப்பவர்கள் கை மற்றும் கால்களை சுத்தம் செய்த பின்னரே, வீட்டிற்குள்ளேயே அனுப்புவார்கள். அது மட்டுமின்றி, கை மற்றும் கால்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு தான் அநேக வேலைகளை செய்வதற்கு கைகள் அவசியமானதாக இருப்பதால், அவற்றை நாம் நன்றாக பராமரிக்க வேண்டியது நமது கடமையாகும். மேலும் பலருக்கும் முகம் வெள்ளையாக இருக்கும், ஆனால் கைகள் மிகவும் கருமையாக காணப்படும். அதனை தொடர்ந்து செய்வதன் மூலம் கைகளின் கருமையான நிறத்தை குறைக்க முடியும்.
ஒரு அகலமான டப்பாவில் பாதி அளவு தண்ணீர் ஊற்றி, பின் அதனுடன் மைல்டு ஷாம்பூ அல்லது பேபி ஷாம்பூ ஒரு ஸ்பூன் கலந்து, எலுமிச்சை பழத்தின் சாறு ஒரு ஸ்பூன் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கொள்ளவும். பின் கைகளை கலந்து வைத்த நீரில் பத்து நிமிடங்கள் நன்றாக ஊறவைத்து, பிறகு சுத்தமான நீரில் கைகளை கழுவ வேண்டும். அவ்வாறு செய்வதால் கைகள் ஈரப்பதத்துடன் இருப்பது மற்றுமின்றி கைகளில் இருக்கும் அழுக்குகளை அகற்றி, கைகள் பாதுகாக்கப்படுகிறது.
இந்த ஸ்டெப் பை தொடர்ந்து, ஒரு பௌலில் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் காபி பவுடர் மற்றும் இரண்டு ஸ்பூன் சர்க்கரை, 3 ஸ்பூன் தயிர் என மூன்றையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின் அந்த கலவையை கைகளில் நன்றாக தேய்த்து, 10 முதல் 15 நிமிடங்கள் வரை காத்திருந்து, பிறகு கைகளை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், கைகளை கலராக மாற்ற முடியும்.