கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் கருப்பு பூஞ்சை நோய் பரவி வருகின்றது. இதற்கு ஒரு சிலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆக்ராவில் பிறந்து 18 நாளே ஆன பெண் குழந்தை ஒன்றுக்கு கருப்பு பூஞ்சை அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் கருப்பு பூஞ்சை தொற்று இந்த குழந்தைக்கு நீக்கப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், குழந்தையின் உடலில் கருப்பு புள்ளி மற்றும் கொப்புளம் இருந்தது. தற்போது அவை நீக்கப்பட்டுவிட்டது. இப்போது குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.