Categories
உலக செய்திகள்

“கருணைக்கொலை” ஆதரிக்கும் மக்கள்…. சட்டபூர்வமாக்க அரசு முடிவு…!!!

தீராத நோய்களால் அவதிப்படுபவர்களை கருணைக்கொலை செய்வதை சட்டபூர்வமாக்க மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நியூசிலாந்தில் கருணைக் கொலை செய்திட  நியூசிலாந்தர்கள் எண்ட் ஆஃப் லைஃப் மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக தீராத நோயினால் அவதிப்படுபவர்களை  கருணைக்கொலை செய்திட இந்த மசோதா வழிவகுக்கிறது. தற்போது இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் கிட்டத்தட்ட அரை மில்லியன் வாக்குகள் எண்ணப்படவில்லை.

இந்நிலையில் தற்போது வரை பதிவான வாக்குகளில் 65.2 சதவீதத்திற்கும் மேலான வாக்காளர்கள் இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்து இருப்பதாகவும், தேர்தல் இறுதி முடிவுகள் நவம்பர் ஆறாம் தேதி வெளியிடப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடைசி வாக்கெடுப்பு இந்த மசோதாவை நிறைவேற்றும் படி அமைந்தால் கருணைக்கொலையை சட்டபூர்வமாக்கிய நெதர்லாந்து மற்றும் கனடா போன்ற நாடுகள் உள்ளடங்கிய பட்டியலில் நியூசிலாந்தும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நோய்வாய்பட்டவர்களுக்கும் மட்டும் பொருந்தக்கூடியதும் மற்றும் பல்வேறு பாதுகாப்புகளை உள்ளடக்கியதுமான இந்த சட்டம் அடுத்த வருடம் அக்டோபர் மாதத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய தேர்தலில் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெசிந்தா ஆர்டென் கருணைக்கொலை மசோதாவையும்,பொழுதுபோக்கு பயன்பாட்டிற்காக கஞ்சாவையும் சட்டபூர்வமாக ஆக்குவது குறித்த வாக்கெடுப்பை ஆதரித்துள்ளார்.

 

Categories

Tech |