Categories
சினிமா தமிழ் சினிமா

கருணாநிதி மீது வீண் பழி போடுகிறதா கர்ணன் திரைப்படம்?… பெரும் சர்ச்சை…!!!

கருணாநிதி மீது வீண் பழி போடும் விதமாக இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்தை எடுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கர்ணன் திரைப்படம் மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் அரசியல் ரீதியாக எடுக்கப்பட்ட படம் என்பதால் சில கருத்து மோதல்களை உருவாக்கியுள்ளது. இந்தப்படம் கொடியின் குலத்தில் நடந்த சாதிய மோதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. அந்த ஊரின் பெயரை நினைவு படுத்தும் விதமாக கர்ணன் திரைப்படத்தில் வரும் கிராமத்துக்கு கொடியன்குளம் என பெயரிடப்பட்டது.

கொடியன்குளம் கலவரம் நடந்ததும், உயிர்கள் பறிக்கப்பட்டதும் 1995 ஆண்டில், அப்போது செல்வி ஜெயலலிதா முதல்வராக பதவி வகித்து வந்தார். ஆனால் 1998ம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக் காலத்தில் கொடியன்குளம் கலவரம் நடந்ததாக திரைப்படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கொடியன்குளம் சம்பவம் ஜெயலலிதா ஆட்சியில் நடந்தது உண்மைதான். ஆனால் 1997ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது போக்குவரத்து கழகங்களுக்கு வரலாற்று நாயகர்களின் பெயர்களை சூட்டிய போது, மாவீரன் சுந்தரலிங்கனார் பெயர் வைத்த பேருந்துகளில் ஏற மாட்டோம் என ஆதிக்க சாதியினர் கலவரம் செய்தனர்.

அந்த பெயரை மாற்றிய ஆகவேண்டிய சூழல் ஏற்பட்டபோது, அவரது பெயரை மாற்றி அவருக்கு இழுக்கு சேர்க்க மாட்டேன் என்று ஒட்டுமொத்தமாக அனைத்து போக்குவரத்து கழகங்களும் சூடிய பெயர்களை மாற்றினார் கருணாநிதி. இதனையடுத்து கர்ணன் திரைப்படம் பேருந்து அரசியலை ஒரு குறியீடாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. பேருந்து பிரச்சனை ஏற்பட்ட கருணாநிதி ஆட்சியில், ஒடுக்கப்பட்டவர்கள் பக்கம் நின்றது கருணாநிதியின் அரசு. இருந்தாலும் அந்த பேருந்து பிரச்சனையை நினைவுபடுத்தும் விதமாக கர்ணன் கதை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அப்படத்தின் இயக்குனர் மாரிசெல்வராஜ் விரைவில் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |