செய்தியாளர்களிடம் பேசிய பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி, கொரோனா தடுப்பூசி சான்றிதழில் ஏன் பிரதமர் படம் இருக்கக்கூடாது, அப்போ அவங்களுக்கு பிரதமர் இல்லை என்று சொல்ல சொல்லுங்க. அவங்க தானே பிரதமர், யாருக்குமே அவர்தான் பிரதமர். கண்டிப்பா இருக்கணும், ஏன் இருக்கக்கூடாது. பிரதமருடைய அற்புதமான அந்த செயல்பாடுகள் தான் இன்றைக்கு 157 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது, இது யாராலும் மறுக்க முடியுமா ?
தடுப்பூசி போட்டால் செத்து போவார்கள், தடுப்பூசி போட்டால் பிரச்சனை வரும், தடுப்பூசி போட்டால் ஆண்மை போய்விடும் என்று சொன்னவங்க எல்லாம் இதைப் பற்றி பேசவே கூடாது. ஆனாலும் நாம் ஏன் தடுப்பூசி போட்டீர்கள் என்று கேட்கல. ஏனென்றால் கேட்கக் கூடாது, நம் உயிர் முக்கியம். வாதம் பண்ண வேண்டுமென்றால் கேட்கணும், ஆனால் கேட்கவில்லை.
ஏனென்றால் இவர்கள் யாருக்குமே தடுப்பூசி குறித்து பேசுவதற்கு தகுதியை இழந்து ரொம்ப நாளாச்சு. திமுக என்ன பேசிட்டு இருந்தாங்க தடுப்பூசி குறித்து, இன்னைக்கு என்ன பேசுறாங்க ? கேட்டா இன்னைக்கு தொலைக்காட்சி விவாதங்களில் வந்து… திமுக , முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி போட்டோ போடுகிறார்கள் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு…. அதெல்லாம் கேளுங்க அதுக்கப்புறம் பிரதமர் போட்டோ ஏன் போட்டாங்க என்று அதுக்கப்புறம் கேட்கலாம் என தெரிவித்தார்.