Categories
உலக செய்திகள்

கருங்கடல் மீது ரோந்து பணிக்கு சென்ற விமானம்…. திடீரென பாய்ந்த ஏவுகணை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல நாட்டில் மீண்டும் கருங்கடல் மீது ரோந்து பணி தொடங்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா  நாட்டை சேர்ந்த விமானம் ஒன்று கடந்த மாதம் 29-ஆம் தேதி தனது வழக்கப்படி கருங் கடல் மீது ரோந்து சென்றுள்ளது. அப்போது 2 ரஷிய போர் விமானங்கள் பிரித்தானிய விமானத்தை பின்தொடர்ந்து வந்துள்ளது. இந்நிலையில் திடீரென அந்த ரஷிய போர் விமானம் ஒன்றில் இருந்து ஏவுகணை ஒன்று சீறிப்பாய்ந்துள்ளது. இந்த நாடகம் 90 நிமிடங்கள் நீடித்திருக்கிறது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விமான ஒட்டிகள் கடந்த சில நாட்களாக ரோந்து பணி செல்வதையே  நிறுத்தி விட்டார்களாம். தற்போது  போர் விமானங்களுடன் இணைந்து மீண்டும் ரோந்து செல்வதை  துவங்கியுள்ளது.

இந்நிலையில் தங்கள் போர் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவுகணை ஏவப்பட்டதாக ரஷியா கூறியுள்ளது. ஆனாலும் அது எவ்வளவு ஆபத்தான ஒரு விஷயமாக முடிந்திருக்க கூடும் என்பதை நினைவூட்டும் ஒரு சம்பவமாக பிரித்தானிய எடுத்துக் கொண்டுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்புத் துறை செயலாளர் கூறியுள்ளார்.

Categories

Tech |