சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் கருப்பண்ணன் சந்திப்பகுதியில் பிரகாஷ்(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் பொருட்களை பேக்கிங் செய்யும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரகாஷூக்கு அதே பகுதியில் வசிக்கும் வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரைப் பார்க்கச் சென்றபோது அந்த வாலிபரின் 17வயது தங்கையுடன் பிரகாஷ் பேசி வந்துள்ளார். இதனை அடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரகாஷ் அந்த சிறுமியை பார்ப்பதற்காக சென்று வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு ஆசை வார்த்தைகள் கூறி பிரகாஷ் சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் அந்த சிறுமி கர்ப்பமானதாக கூறப்படுகிறது. அப்போது பிரகாஷ் கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி கொடுத்து கருவை கலைத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரகாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் பிரகாஷூக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதமும், 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.