Categories
உலக செய்திகள்

கருக்கலைப்புக்கு அனுமதி… அதிரடியாக அறிவித்த நாடு…. உற்சாகத்தில் பெண்கள்…!!

அர்ஜென்டினா கருக்கலைப்பிற்கு அனுமதியளித்து புதிய சட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. 

லத்தீன் அமெரிக்காவில் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ள நாடு அர்ஜென்டினா. இந்நிலையில் தற்போது அர்ஜென்டினா ஒரு புதிய சட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.  அதாவது பெண்கள் தங்கள் கர்ப்பத்தின் 14-வது வாரம் வரை கருவை கலைக்கலாம் என்பதாகும். மேலும் லத்தீன் அமெரிக்காவிலேயே கருக்கலைப்பிற்கு அங்கீகாரம் அளித்த முதல் நாடு அர்ஜென்டினா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாதத்தின் தொடக்கத்தில் The chember of deputies, கருக்கலைப்பு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனைத்தொடர்ந்து அர்ஜெண்டினாவின் செனட்டில் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் 38 பேர் இதனை ஆதரித்தும் மற்றும் 29 பேர் எதிர்ப்பு தெரிவித்தும் வாக்களித்துள்ளனர்.

https://twitter.com/ParisPasRose/status/1344184194503684102

மேலும் ஒருவர் வாக்களிக்கவில்லை. இதனைத்தொடர்ந்து செனட்டில் எடுக்கப்பட்ட அதிகாரபூர்வமான வாக்கெடுப்பிற்கு பிறகு கருகலைப்புக்கான சட்டத்தினை அர்ஜென்டினா அங்கீகரித்துள்ளது. மேலும் தற்போது வரை அர்ஜென்டினாவில் கற்பழிப்பு வழக்குகள் மற்றும் தாயின் உடல்நிலையில் மிகுந்த ஆபத்து போன்ற நிலையில் மட்டுமே கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜனாதிபதியான ஆல்பர்டோ பெர்னாண்டஸ் இந்த சட்டத்தினை மீண்டும் அறிமுகப்படுத்துவது தன் பிரச்சார வாக்குறுதிகளில் ஒன்றாகும் என்று முன்பே உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் வாசிக்கப்பட்ட போது கட்டிடத்திற்கு வெளியே இருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் இதனை வரவேற்கும் வகையில் ஆரவாரமிட்டு பச்சைக்கொடி அசைத்துள்ளனர்.

Categories

Tech |