கராச்சியில் கடந்த 2022 ஆம் வருடம் முதல் வங்கிக் கொள்ளையாக சென்ற வியாழக்கிழமை ரூபாய் 20 லட்சம் ஆயுதம் ஏந்திய கும்பல் கொள்ளையடித்து சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காவலர்த்துறையினர் தரப்பில் கூறப்பட்டுயிருப்பதாவது “ஷாஹ்ரா-இ-நூர் ஜெஹான் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு வங்கிக்குள் காலை 11.09 மணியளவில் நுழைந்த ஆயுதம் ஏந்திய கொள்ளை கும்பல், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்து வங்கி காவலர்களையும், வங்கி ஊழியர்களையும் தாக்கி துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டனர்.
இதையடுத்து பணம் வைக்கப்பட்டு இருந்த கவுண்டர்களில் சுமார் ரூபாய் 20 லட்சம் பணத்தை கொள்ளையடித்துடன், காவலர்களின் ஆயுதங்களையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றனர். இதனை அறிந்து வங்கிக்கு வந்த காவல்துறையினர் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளையில் அடையாளம் தெரியாதவர்கள் மீது ஷாஹ்ரா-இ-நூர் ஜெஹான் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி கராச்சி சுந்திரிகர் சாலையிலுள்ள வங்கி ஒன்றுக்கு பணம் எடுத்து வரும் வேன் ஓட்டுநர் பணம் மற்றும் வேனுடன் தப்பிஒடினார். இது தொடர்பாக ஓட்டுநர் மற்றும் அவரது கூட்டாளிகள்மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.