ஆரணி டவுன் பகுதியில் கோவில் திருவிழாவில் கபடி பயிற்சியின் ஈடுபட்டிருந்த கபடி வீரர் கரணம் அடிக்கும் போது மரணம் அடைந்தார். பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் களத்து மேட்டு தெருவில் எட்டாம் தேதி மாரியம்மன் கோவில் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது. இதில் கபடி குழுவினர் கபடி போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்தன. அப்போது ஆரணி டவுன் களத்து மேட்டு தெருவை சேர்ந்த கபடி வீரரான வினோத்குமார் என்பவர் கபடி பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது வினோத்குமார் கரணம் அடிக்கும் பயிற்சி மேற்கொண்டபோது திடீரென்று மயங்கி விழுந்தார்.
ஆரணி பகுதியில் கோவில் திருவிழாவில் கபடி பயிற்சியில் ஈடுபட்டிருந்த கபடி வீரர் வினோத்குமார் கரணம் அடிக்கும்போது மயக்கமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.. 😭😭 pic.twitter.com/HfxeErFV3G
— 🔥என்றும்தமிழன்🔥 (@tamilan_mj) August 16, 2022
இதை பார்த்து அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தவர்கள். பின்னர் வினோத்தை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தினால் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் நேற்று இரவு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்நிலையில் பயிற்சியின் போது வினோத் மயக்கமடைந்து மூர்ச்சையாகும் வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.