மாமன்னன் திரைப்படத்தின் ஷூட்டிங்கின்போது படக்குழுவினர் வடிவேலுக்கு மாலை அணிவித்து வரவேற்று உள்ளனர்.
தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகரான வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இந்தபடத்திற்கு பிறகு அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். வடிவேலு இவர் தவிர்க்க முடியாத காரணங்களால் இடையில் படத்தில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இந்தப் படத்தை சுராஜ் இயக்குகிறார். படத்தின் சூட்டிங் பரபரப்பாக நடந்து வருகின்றது.
இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து மாமன்னன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் வடிவேலு. இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்குகின்றார். கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார். மேலும் கதாநாயகியாக கீர்த்திசுரேஷ் நடிக்கிறார். இத்திரைப்படத்தின் சூட்டிங்கில் வடிவேலு கலந்து கொண்டபோது படக்குழுவினர் அவருக்கு மாலை அணிந்து வரவேற்றுள்ளனர். வடிவேலின் காமெடி ரசிகர்களிடையே நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது. இந்நிலையில் இவர் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள நிலையில் படத்திற்கு ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.