Categories
பல்சுவை

கம்பளி பூச்சி தொல்லை அதிகமா இருக்கா?…. இனி கவலைய விடுங்க…. இதோ உங்களுக்கான சில டிப்ஸ்….!!!!

வீட்டு தோட்டங்கள் மற்றும் செடி கொடிகளில் அதிகமாக இருக்கும் பூச்சி வகைகளில் முக்கியமானது கம்பளிப்பூச்சி. அதனை பார்க்கும் போது உடலின் சருமத்தில் மயிர் கால்களில் அரிப்பு எடுக்கும். உண்மையில் அவை பார்ப்பதற்கு அருவருப்பாக இருக்கும். அவை சருமத்தில் பட்டால் அரிப்பாக இருக்கும். சிலருக்கு தோல் முழுக்க சிவப்பையும் தடிப்பையும் உண்டாக்கிவிடும். தோல் மொத்தமாக வாங்கி விடக்கூடும். இப்படி பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கக்கூடிய கம்பளி பூச்சி அதிகம் இருக்கும் இடம் முருங்கை மரம் தான். அப்படி மரத்தின் கம்பளி பூச்சி வராமல் தடுக்க என்ன செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

வேப்பிலை மூலிகை புகை:

கம்பளிப் பூச்சிகள் செடிகள் மற்றும் மரங்கள் மீது அட்டை போல ஒட்டிக் கொள்ளும். அதனை அப்புறப்படுத்தும் விஷயம் என்பது மிகவும் கடினம். அதனை நெருப்பில் போட்டு தான் அளிக்க முடியும். சிலர் மரங்களில் தீப்பந்தத்தை கொளுத்தி வைப்பார்கள். அதனால் கம்பளிப்பூச்சி அழிந்தாலும் கூட முருங்கை மரமும் கூடவே வீணாகிவிடும்.

இதற்கு என்ன தீர்வு என்றால் செடி அல்லது மரங்கள் என்ற இடத்தில் கம்பளிப்பூச்சி உள்ளது என்பதை பார்த்து கொள்ள வேண்டும். அதற்குக் கீழ் மரத்துக்கு சற்று தள்ளி காலடிக்கு பள்ளம் தோண்ட வேண்டும். அதில் காய்ந்த சருகுகள், ஓலைகள் மற்றும் குச்சிகள் சேர்த்து அல்லது அடுப்புக்கரி உடன் பேப்பர் சேர்த்து எரியவிட வேண்டும். அது நன்றாக எரியும் போது அதில் ஒரு கைப்பிடி வேப்பிலையை பச்சையாக அல்லது காய்ச்சலுடன் இருப்பதை சேர்த்து விட வேண்டும். 15 நிமிடங்கள் வரை அந்த நெருப்பு நன்றாக எரிய வேண்டும். அதனைப்போலவே அதிலிருந்து புகையும் வரவேண்டும். காலை மாலை என இரண்டு வேளையும் இதனை செய்து வந்தால் கம்பளிப்பூச்சி வேரோடு அழிந்து விடும். அந்த நெருப்பு செடி மற்றும் மரத்தை எதுவும் செய்யாது.

சோப்புத் தண்ணீர்:

சோப்புத் தண்ணீரை கம்பளிப்பூச்சியை அழிப்பதற்கு நாம் பயன்படுத்தலாம். செடிகள் மீது அதிக அளவு இந்த முறையை பின்பற்ற வேண்டாம். ஆனால் செடியிலிருந்து வீட்டிற்குள் வரும்போது இந்த முறை உங்களுக்கு மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். துணி பவுடர் எந்த பிராண்ட் ஆக இருந்தாலும் அதனை எடுத்து ஒரு டம்ளர் நீர் விட்டு நுரை வரும் வரை நன்றாக கலக்கிக் கொள்ளவேண்டும். அந்த நீரை அப்படியே கம்பளிப்பூச்சி இருக்கும் இடத்தில் ஊற்ற வேண்டும். கம்பளிப் பூச்சிகள் வரும் இடங்களில் அதனை ஊற்றி வைக்கலாம். இப்படி செய்தால் வீட்டிற்குள் கம்பளி பூச்சி வராமல் தடுக்க முடியும்.

பெருங்காயம் மஞ்சள் கரைசல்:

செடிகளையும் மரங்களையும் பாதிப்பில்லாமல் மீட்பதற்கு கம்பளி பூச்சி வரும் மழைக் காலங்களுக்கு முன்னரே இதை மரங்கள் செடிகளில் அடித்துவிட வேண்டும். கால் லிட்டர் தண்ணீருடன் 50 கிராம் அளவு கட்டி பெருங்காயம் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு பிறகு இறக்கி ஆறவிடவும். மற்றொரு பாத்திரத்தில் 200 கிராம் அளவுக்கு விரலி மஞ்சளை அரைத்து ஒரு லிட்டர் நீரில் கரைத்து கொதிக்க விடவும். அதன் பிறகு இறக்கி பெருங்காயம் கரைசல் மஞ்சள்தூள் இரண்டையும் கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளலாம். ஒரு பங்கு கரைசலுடன் இரண்டு பங்கு நீர் சேர்த்து செடி மரங்களின் மீது அடித்து விட்டால் கம்பளிப்பூச்சி எப்போதுமே வராது. மற்ற பூச்சிகளும் வராமல் தடுக்க முடியும்.

பப்பாளி இலை கரைசல்:

பப்பாளி இலையை எடுத்து அதனை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு கப் அளவுக்கு எடுத்துக் கொண்டு அதனுடன் ஒரு டம்ளர் நீர் சேர்த்து அகலமான பாத்திரம் ஒன்றில் ஊற்றிக் கொள்ள வேண்டும். பப்பாளி இலையை அடிக்கடி நீருடன் கலக்க வேண்டும். அப்படி செய்தால் நிலை மென்மையாக கூடும். இதனை குறைந்தது 10 மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் அரைத்து சாறை எடுத்துக்கொள்ளவும்.

அதனை நீர் சேர்க்காமல் அப்படியே ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி செடிகளின் மீது மூன்று வேளையும் பரவலாக தெரிவித்தால் எந்த பூச்சிகள் அண்டாது. கம்பளி பூச்சி அதிகமாக இருந்தால் நாளொன்றுக்கு ஆறு வேளை தெளித்து வந்தால் கம்பளிப் பூச்சிகள் அப்படியே அழிந்து விடும். இதனைப் போலவே வேப்ப இலைகளை கொண்டும் கம்பளிப்பூச்சியை ஒழிக்கலாம்.

Categories

Tech |