Categories
உலக செய்திகள்

கமீலோ சேகுவாரா திடீரென இறப்பு…. இரங்கல் தெரிவித்த கியூபா அதிபர்…. சோகம்…..!!!!

உலகளவில் இன்று வரை புரட்சிக்கும், தியாகத்திற்கும் உதாரணமாக திகழ்ந்தவர் சேகுவாரா. கியூபாவை சேர்ந்த இவர் புரட்சியாளர், மருத்துவர், அரசியல்வாதி, இலக்கிய வாதி என பன்முகத் தன்மை கொண்டவர். இதில் சேகுவாராவின் இளைய மகன் கமீலோ சேகுவாரா. இவர் சேகுவாரா ஆய்வு மையத்தின் இயக்குனராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கமீலோ சேகுவாரா வெனிசூலா நாட்டின் சராகவ் நகருக்கு சென்ற போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சிறிதுநேரத்தில் அவர் மரணமடைந்தார். இந்நிலையில் கமீலோசேகுவாராவின் மறைவிற்கு கியூபா நாட்டு அதிபர் இரங்கல் தெரிவித்து ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ளார். உலகம் முழுதும் இருந்து அவரது மறைவுக்கு பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கமிலோ சேகுவாராவின் மறைவுக்கு கியூபா அதிபர் டயஸ் கேனல் தன் டுவிட்டர் பதிவில் “ஆழ்ந்த வலியுடன், சேவின் மகனும் அவரது சிந்தனைகளை ஊக்குவிப்பவருமான கமிலோவிடம் நாங்கள் விடைபெறுகிறோம்” என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |