கமல் ரஜினியை தொடர்ந்து விரைவில் புதிய கட்சி தொடங்க உள்ளதாக நடிகர் பார்த்திபன் பரப்பரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் அதன் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில் கமல் மற்றும் ரஜினியைத் தொடர்ந்து விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் பரப்பரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் தற்போது அரசியலுக்கு வரும் நடிகர்களும் சிறப்பான ஆட்சியை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை தெரிவித்துள்ளார். நடிகர்கள் என்பதால் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.