விக்ரம் படத்தின் பத்தல பத்தல பாடலுக்கு சாண்டி மாஸ்டர் தனது மச்சினிச்சியுடன் நடனமாடியுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் உலக நாயகன் என அழைக்கப்படுபவர் கமல்ஹாசன். இவர் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “விக்ரம்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் 3ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் அனிருத் இசையில் கமல் எழுதிய பத்தல பத்தல பாடல் லிரிக்கல் வீடியோ வெளியாகி அனைவரிடமும் ரீச்சானது. மேலும் ரசிகர்கள் கமலின் வரிகள் வேற லெவலில் இருப்பதாக கூறி வந்தனர். இப்பாடலுக்கு பலரும் டான்ஸ் ஆடி வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருகின்றார்கள்.
இந்த நிலையில் பத்தல பத்தல பாடலுக்கு கொரியோகிராஃப் செய்த சாண்டி மாஸ்டர் தனது மச்சினிச்சி சிந்தியாவுடன் சேர்ந்து டான்ஸ் ஆடியுள்ளார். இந்த வீடியோவை சிந்தியா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இவர்கள் இருவரும் அவ்வப்போது டான்ஸ் ஆடும் வீடியோக்களை சிந்தியா தனது இன்ஸ்டாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றார்.
இந்நிலையில் கமல் ரசிகர்கள் பாட்டில் கமலுக்கு ஸ்டெப்ஸ் போதுமானதாக இல்லை. கொரியோகிராஃபர் யார் என்று தெரிந்தால் சொல்லுங்கள் என கேள்வி கேட்டு வருகிறார்கள் குறிப்பிடத்தக்கது.
choreographer yaarunu therinjikalaama? pic.twitter.com/ix5w7LH1ff
— VJ (@vijivj6911) May 11, 2022