நடிகை கஸ்தூரி சினிமா, அரசியல், விளையாட்டு, சின்னத்திரை என எல்லா டாபிக்கையும் பேசி துணிச்சலுடன் தனது கருத்துக்களை பதிவிட்டும் விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகின்றார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். இந்நிலையில் கமல் ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதமே இல்லை என பேசியதற்கு நடிகை கஸ்தூரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “கமல் ஒரு என்சைக்ளோபீடியா. அவர் தன் அறத்தையும், அறிவாற்றலையும் அரசியலுக்காக சமரசம் செய்து கொள்வது வருத்தம்.ஆதி மனிதன் தன்னை ஒருபோது மனிதன் என கூறி கொண்ட வரலாறு இல்லை. அந்த காலத்தில் ஹோமோசேப்பியன்ஸ் என்ற பெயரும் இல்லை. அதனால் அவன் மனிதனே இல்லை என்பது என்ன வாதம்” என கேள்வி எழுப்பியுள்ளார்.