Categories
சினிமா தமிழ் சினிமா

கமல்ஹாசன் மிரட்டப்பட்டாரா?…. உண்மை என்ன….? வெளியான பரபரப்பு தகவல்கள்….!!!!

கமல்ஹாசனை மிரட்டி தான் விக்ரம் படத்தின் ரிலீஸ் உரிமையை அவர் கைப்பற்றியதாக கூறப்பட்டு வந்தது. இது சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் விக்ரம் பட விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், நான் விரட்டுகிறேன் என்கிறார்கள்,கமலை மிரட்டி இந்த படத்தை வாங்கி விட்டீர்களா என கேட்டார்கள், யார் மிரட்டினாலும் அவர் பயப்பட கூடியவர் அல்ல. அவரை யாராலும் மிரட்ட முடியாது. கமல்ஹாசனுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் நடிப்பை பார்த்து வளர்ந்தவன் தான் நான். அரசியல் கட்சி தொடங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஆனால் ஒன்னே ஒன்னு வருடத்திற்கு ஒரு படமாவது கமல்ஹாசன் நடிக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

Categories

Tech |