கமல்ஹாசனை தொடர்ந்து தனுஷுக்கும் நடக்கும் விஷயம் பற்றி ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் தனுஷ். என்னதான் முன்னணி நடிகராக பழமொழிகளில் நடித்து பிரபலமான நடிகராகவும் இருந்தாலும் அவரின் சமீபத்திய படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றது. இதன் காரணமாக தனுஷின் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்க தனது அடுத்த படத்தின் மூலமாக மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்யும் இணைப்பில் நடிகர் தனுஷ் உள்ளார். அந்த வகையில் செல்வராகவனின் நானே வருவேன் மற்றும் தெலுங்கில் உருவாகும் வாத்தி, மித்திரனின் திருச்சிற்றம்பலம் போன்ற படங்களை மிகவும் நம்பி இருக்கின்றார் தனுஷ்.
இந்த நிலையில் யாரடி நீ மோகினி எனும் வெற்றி படத்தை இயக்கிய மித்ரன் பல வருடங்கள் கழித்து மீண்டும் தனுஷ் உடன் திருச்சிற்றம்பலம் படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் மூலமாக ஏழு வருடங்கள் கழித்து அனிருத் மற்றும் தனுஷ் இணைந்து இருக்கின்றார்கள். இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் சென்ற ஜூலை 18-ம் தேதி திரையரங்கில் வெளியாகியிருக்கின்றது. சமீபத்தில் வெளியான இப்படம் அனைத்து விதமான ரசிகர்களையும் ஈர்க்கும் படி அமைந்து வசூலில் அடித்து நொறுக்கி வருகின்றது.
இத்திரைப்படம் ரிலீஸான வேகத்தில் அதை ஆன்லைனில் கசிய விட்டது தமிழ் ராக்கர்ஸ். ஆன்லைனில் இத்திரைப்படம் வந்துவிட்ட போதிலும் திருச்சிற்றம்பலத்தை தியேட்டரில் பார்த்து ரசிக்க மக்கள் முடிவு செய்து விட்டார்கள். இதனால் திரையரங்கில் கூட்டம் குறையவில்லை. இத்திரைப்படம் ரிலீஸான மூன்று நாட்களில் உலக அளவில் 32.97 கோடி வசூல் செய்திருக்கின்றது.
முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படமும் தமிழ் ராக்கர்ஸில் கசிந்தது. ஆனால் அதையும் தாண்டி பாக்ஸ் ஆபிஸில் வசூலில் அள்ளியது. ரசிகர்கள், தமிழ் ராக்கர்ஸால் விக்ரம் திரைப்படத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை என வியந்த நிலையில் தற்பொழுது திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்கும் நடந்து கொண்டிருக்கின்றது. இத்திரைப்படத்தையும் தமிழ் ராக்கர்ஸை தாண்டி மக்கள் திரையரங்கிற்கு சென்று வசூலை அதிகரிக்க செய்து கொண்டிருக்கின்றார்கள் என பேசி வருகின்றார்கள்.