மலையாளத்தில் மூத்த இயக்குனர் கே எஸ் சேதுமாதவன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். இவருக்கு வயது 90. மலையாளத்தில் கமலஹாசனை அறிமுகப்படுத்தியதும், தமிழில் நம்மவர் படத்தை இயக்கியதும் கே எஸ் சேதுமாதவன் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
