நதியா தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகை ஆவார். 1980-களில் வலம் வந்த ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். கதாநாயகியாக நடித்த வந்த இவர் பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும், தமிழ் ,தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடிக்க இவருக்கு பட வாய்ப்புகள் வருகின்றன. தமிழ் சினிமாவில் ரஜினி உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ள நடிகை நதியா இதுவரை கமலுடன் மட்டும் நடிக்கவில்லை.
இது குறித்து அவரிடம் கேட்டபோது. கால்ஷீட் பிரச்சனை காரணமாகவே அவருடன் நடிக்க முடியாமல் போனது. இது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. அப்போது வெளியான ‘விக்ரம்’ படத்தில்கூட தான் நடிக்க வேண்டியதுதான் என கூறினார்.