கமல் நடித்த விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தில் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து எடுத்திருக்கிறாராம். இந்த படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி மற்றும் பகத் ஃபாசில் போன்றோரும் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையில் உருவான இந்த திரைப்படம் ஜூன் 3 ம் தேதி வெளியாக இருக்கின்றது.
விக்ரம் படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் ரசிகர்களின் அமோக வரவேற்பினை பெற இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக விக்ரம் படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யா மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக பேசப்பட்டு வருகிறது. இருந்தாலும் படத்தில் திருப்பத்தை ஏற்படுத்தக் கூடிய ரோலாக சூர்யாவின் கதாபாத்திரம் இருக்கும் என கூறப்பட்டு வருகின்றது.
மேலும் கமலுடன் சூர்யா இருக்கும் ஒரு வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது. இருந்தபோதிலும் இதனை பற்றிய எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். மிகப்பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவை காண்பதற்கு பல ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். உலகநாயகனின் திரைப்படம் நான்கு ஆண்டுகளுக்குப் பின் வெளியாவதன் காரணத்தால் விக்ரம் படத்தின் மீது ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இன்று நடைபெறும் விக்ரம் இசை வெளியீட்டு விழாவினை நேரடியாக காண பல ரசிகர்கள் குவிந்திருக்கின்றன. ஆனால் பாஸ் கிடைக்காத ரசிகர்கள் ஆடியோ விழாவை நேரில் காணலாம் என நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் தற்போது வந்த தகவல் என்னவென்றால் விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழா நேரலை ஒளிபரப்பு கிடையாது என தெரிவித்துள்ளனர். இதனால் கமல் ரசிகர்கள் வருத்தத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். ஒரு பக்கம் கமல் ரசிகர்கள் விக்ரம் இசை வெளியீட்டு விழாவினை எதிர்நோக்கி ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதே சமயத்தில் மற்றொரு பக்கம் விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களுக்கும் இசை வெளியீட்டு விழாவினை காண ஆவலாக இருந்து வருகின்றனர். ஏனென்றால் விக்ரம் இசை வெளியீட்டு விழாவில் தளபதி 64 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் மீண்டும் தளபதியுடன் இணைய இருக்கின்றார். மேலும் இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமல் தயாரிக்க இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. எனவே இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்தது குறிப்பிடத் தக்கதாகும்.