தமிழ் திரைப்பட உலகில் நடிகருமான மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டார். அதில். அமெரிக்கா பயணம் முடிந்த பிறகு சென்னைக்கு திரும்பிய எனக்கு லேசான இருமல் இருந்தது. இதனால் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றபோது கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.
மேலும் மருத்துவமனையில் என்னை தனிமைப் படுத்திக் கொண்டேன். எனவே கொரோனா பரவல் நோய் நீங்கவில்லை. அதனால் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கொரோனா நோய் தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கமலஹாசன் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார் என்று மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.