Categories
தேசிய செய்திகள்

கபடி விளையாட முயன்ற சபாநாயகர்…. பின்னர் நடந்த விபரீதம்…. பரபரப்பு சம்பவம்…!!!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள அமுதாலவலாசா பகுதியில் உள்ள மைதானத்தில் சி.எம். கோப்பை என்ற பெயரில் மாவட்ட வாரியாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியை சபாநாயகர் சீதாராம் தொடங்கிவைத்தார். கபடி வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக அவர் அங்கிருந்தவர்களுடன் சேர்ந்து கபடி விளையாடிய போது எதிரே இருந்தவரை தொட முயற்சித்தார்.

அப்போது அவரது கால் இடறி கீழே விழுந்தார். உடனடியாக அதிகாரிகள் அவரைத் தூக்கினர். அதன்பிறகு விளையாட்டில் இதெல்லாம் சகஜமப்பா என்று சபாநாயகர் கூறி, மேலும் சில நிமிடங்கள் அவர்களுடன் விளையாடி விட்டு காரில் புறப்பட்டு சென்றார்.

Categories

Tech |