ஹைதராபாத் மாநிலம் சூர்யாபெட் பகுதியில் 47வது ஜூனியர் தேசிய கபடி போட்டி தொடங்குவதற்கு முன்பு பார்வையாளர்கள் கேலரி இடிந்து விழுந்ததில் 160க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம், சூர்யாபெட் மாவட்டத்தில் கபடி போட்டி கேலரி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதில் பார்வையாளர்கள் அமர்ந்திருந்தனர். அது திடீரென்று சரிந்து விழுந்ததில் 160க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆறு பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது .
மேலும் கேலரி இடிந்து விழுந்ததற்கு தரம் மற்ற மரமும் பொருளும் தான் காரணம் என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் இதற்கான காரணம் என்னவென்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 47வது ஜூனியர் தேசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்த விபத்து நிகழ்ந்ததால் அந்த போட்டி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.