கரடி கன்றுக்குட்டியை கடித்து குதறிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரடி ஒன்று சுற்றித் திரிகிறது. இந்த கரடி நியூசிகர்னப்பள்ளி பகுதிக்குள் நுழைந்து மகாதேவன் என்பவரது கன்று குட்டியை கடித்து குதறியது. அப்போது கன்றுக்குட்டியின் சத்தம் கேட்டு மகாதேவன் அங்கு விரைந்து செல்வதற்குள் கரடி தப்பி ஓடியது.
பின்னர் மகாதேவன் காயமடைந்த கன்றுக்குட்டியை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அட்டகாசம் செய்யும் கரடியை பிடித்து வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.