Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கன்றுக்குட்டியை அடித்து கொன்ற முதியவர்….. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. வெளியான திடுக்கிடும் தகவல்…!!

முதியவர் கன்று குட்டியை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள கீழ வெளி வீதியில் சிக்கந்தர் ஷேக் அப்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆடு மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இவரது வீட்டிற்கு அருகே போதிய இட வசதி இல்லாததால் வைகை ஆற்றின் தென்கரை பகுதியில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் 7 மாத கன்று குட்டி கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த சிக்கந்தர் ஷேக் அப்துல்லா அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் இது குறித்து விசாரித்துள்ளார். அப்போது நெல்பேட்டை பகுதியை சேர்ந்த காதர் சுல்தான்(65) என்பவர் கன்று குட்டியை அடித்து கொன்றது தெரியவந்தது.

இதுகுறித்து காதர் சுல்தானிடம் கேட்டபோது உங்களது கன்று குட்டி நான் வளர்க்கும் பசு மாட்டிடம் தினமும் பால் குடித்து விட்டு செல்கிறது. இதனால் தான் கன்று குட்டியை கொன்றேன். இது குறித்து பேசினால் உன்னையும் கொலை செய்து விடுவேன் என காதர் சுல்தான் அப்துல்லாவை மிரட்டியுள்ளார். இதுகுறித்து அப்துல்லா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் காதர் சுல்தானை கைது செய்தனர். இதற்கிடையில் காதர் சுல்தான் கன்றுக்குட்டியை தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Categories

Tech |