Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு… மற்றவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள்.. கெளரவம், அந்தஸ்து உயரும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவும் நாளாகவே இருக்கும். கௌரவம் அந்தஸ்து உயரும். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பூமி வாங்கும் யோகம் உண்டாகும். பெற்றோர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். இன்று வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும். எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும். தேவையற்ற செலவுகளை தயவுசெய்து குறைத்துக்கொண்டால் ரொம்ப நல்லது. எந்த ஒரு புதிய முயற்சியிலும் பெரிய தொகை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது.

கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். ரகசியங்களை தயவு செய்து நீங்கள் பாதுகாக்கவேண்டும். உற்றார் உறவினர்களிடையே சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து செல்லும். அக்கம்பக்கத்தினர் இடம் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து செல்லும், பார்த்துக் கொள்ளுங்கள். குடும்பத்தாரிடம் பேசும்பொழுது நிதானமாகவும் அமைதியாகவும், பொறுமையாகவும் பேசுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவ பெருமான் வழிபாட்டையும்  மேற்கொள்ளுங்கள். காரியங்கள் ஓரளவு சிறப்பை கொடுக்கும்.

அதிர்ஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம் மற்றும் இளம் பச்சை நிறம்

Categories

Tech |