Categories
மாநில செய்திகள்

கன்னியாகுமரியில் குரங்கு அம்மை பாதிப்பு…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

கன்னியாகுமரியில் குரங்கு அம்மை அறிகுறி என்று வெளியான தகவல் உண்மை இல்லை என மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்ததாவது: “கன்னியாகுமரியில் குரங்கு அம்மை அறிகுறி என்று வெளியான தகவல் உண்மை இல்லை. குரங்கு அம்மை நோய் குறித்து யூகங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படவில்லை. வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர்கள் படிப்பு முடிந்து வீடு திரும்பிய பிறகு இன்டர்ன்ஷிப் பயிற்சி பெற வேண்டும்.

அதற்கு கட்டணமாக 3 லட்சத்து 20 ஆயிரம் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் வசூலிக்கின்றது. மக்கள் நல்வாழ்வுத்துறை 2 லட்சம் வசூலிக்கிறது. ஆக மொத்தம் 5 லட்சத்து 20 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். இந்நிலையில் பயிற்சி பெற 5 லட்சம் என்பது அதிகமான கட்டணமாக இருப்பதாக அரசிடம் முறையிட்டார்கள். அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று முதல்வர் மு.க ஸ்டாலின் பெயரில் மருத்துவ பல்கலைக்கழகம் வசூலித்த 3 லட்சத்து 20 ஆயிரத்து குறைத்து வெறும் 30000 மட்டுமே செலுத்த உத்தரவு விடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்கள் தமிழகத்தில் பயிற்சி பெற வெறும் 30,000 கட்டினால் போதும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |