இந்தியாவின் பொதுத் துறை வங்கியான கனரா வங்கி தன் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அடிப்படையில் பல வகையான புது அப்டேட்டுகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது வாடிக்கையாளர்கள் தினசரி மேற்கொள்ளும் ATM, POS போன்ற பணப் பரிவத்தனைகளின் உச்சவரம்பை அதிகரித்துள்ளதாக இந்நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பில் ஏடிஎம்களில் Classic டெபிட் கார்டுகளை பயன்படுத்தி தினசரி ரூ.40,000 வரை எடுக்கலாம் என்று உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இப்போது இதை ரூபாய்.75,000 ஆக அதிகரித்துள்ளது. இதேபோன்று இந்த டெபிட் கார்டுகளுக்கான தினசரி POS வரம்பு ரூபாய்.1,00,000 இருந்து ரூ.2,00,000 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. எனினும் NFC-க்கான உச்சவரம்பில் எவ்வித மாற்றமும் இன்றி ரூ.25,000 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் Platinum/ Business போன்ற டெபிட் கார்டுகளை பயன்படுத்தி தினமும் ரூ.50,000 வரை எடுத்துக்கொள்ளலாம். இப்போது இந்த உச்சவரம்பு ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் இந்த டெபிட் கார்டுகளுக்கான தினசரி POS வரம்பு ரூபாய்.2,00,000 இருந்து ரூ.5,00,000 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஆனால் NFC-க்கான உச்சவரம்பில் எவ்வித மாற்றமின்றி ரூ.25,000 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.