சென்னையில் திடீரென்று பெய்த கனமழையின் காரணமாக பசென்னியில் ல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். மெட்ரோ ரயில் நிலையத்திலும் கூட்டம் அலை மோதுகிறது. பல்வேறு பகுதிகளிலும் கடைகலுக்குள் மழை நீர் புகுந்தது. எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் போடப்பட்டிருந்த கூடாரங்கள் காற்றில் பறந்து சென்றன. இந்த நிலையில் சென்னையில் பலத்த மழையின் காரணமாக கடற்கரையிலிருந்து பாரிமுனை செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தொடர் கனமழையால் மெட்ரோ ரயில் சேவை ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு 12 மணி வரை இயங்கும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில் வரிசையில் நின்று காத்திருந்து மக்கள் ரயில்களில் செல்கின்றனர்.